Monday 26 February 2018

வீட்டுக் குறிப்புகள்

1.தயிர் புளித்து விடாமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

2.வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காய வைத்து பின் முறத்தில் போட்டு புடைத்தால் தோல் அகன்று விடும்.

3.நறுக்கிய வாழைக்காயை உப்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் கருத்துப் போகாது.

4.உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் முட்டைகோஸ்,காலிபிளவர் ஆகியவற்றை போட்டு வைத்தால் அதிலுள்ள சிறு பூச்சிகள் இறந்து நீரில் மிதக்கும்.

5.தேனீர் போட நீரையும் சர்க்கரையையும் சேர்த்து கொதிக்க வைத்தால் சுவையாக இருக்கும்.

6.நறுக்கிய கத்திரிக்காயை உப்பு கலந்த நீரில் போட்டு வைத்தால் கருத்துப் போகாது.

7.கடலை பருப்பில் கடுகு எண்ணெய் சிறிது கலந்து காய வைத்தால் கெடாது.

8.சாம்பார் ,மோர்குழம்பு ஆகியவற்றிற்கு பருப்பு உருண்டை செய்து போடும் போது ஒரு மேஜைகரண்டி அரிசி மாவை சேர்த்து உருட்டினால் கரைந்து போகாது.

9.தோசை மாவு புளித்து விட்டால் ஒரு டம்ளர் பால் கலந்தால் புளிப்பை போக்கி விடும்.